கோவை: குட்டிகளுடன் சாலையை கடந்த யானைக்கூட்டம் - மக்கள் அச்சம் !

சின்னத்தடாகம் பகுதியில் ஆறு யானைகள் குட்டிகளுடன் அவசரமாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் தோட்டம் பகுதி வழியாக அழைத்துச் சென்றதால் பரபரப்பு.;

Update: 2025-05-15 08:17 GMT
கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் காட்டு யானைகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றன. வீடுகள், தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவித்து வரும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயில் பகுதியில் ஒற்றை யானை கடைகளை சேதப்படுத்தி வந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக கும்கி யானைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று சின்னத்தடாகம் பகுதியில் ஆறு யானைகள் குட்டிகளுடன் அவசரமாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றதை அப்பகுதி மக்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறையினர் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News