கோவை: திமுக அலுவலகத்தில் பச்சை பெயிண்ட் ஊற்றியவர் கைது !

கோயம்புத்தூர், செல்வபுரத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் பச்சை நிற பெயிண்ட் ஊற்றிய மணிகண்டன் (வயது 40) என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.;

Update: 2025-05-15 09:05 GMT
கோயம்புத்தூர், செல்வபுரத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் பச்சை நிற பெயிண்ட் ஊற்றிய மணிகண்டன் (வயது 40) என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செல்வபுரம் தெற்கு வீட்டு வசதி வாரிய பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மணிகண்டன், நேற்று அதிகாலை மதுபோதையில் தனது வீட்டில் இருந்து பச்சை நிற பெயிண்ட் எடுத்து செல்வபுரம் அண்ணாதுரை சிலை பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள 79-வது வார்டு திமுக அலுவலகம் மற்றும் கலைஞர் படிப்பகம் அலுவலகத்தின் முன்பகுதியில் பெயிண்ட் ஊற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். காலை அவ்வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து 79-வது வார்டு திமுக செயலாளர் ஹக்கீமிடம் தெரிவித்தனர். அவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டன் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்து முன்னணியில் இருந்தது தெரியவந்தது. மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News