மாற்றுத்திறனாளிகள் வண்டி வேண்டும் என கோரிக்கை விடுக்கும் போதெல்லாம் மனசு வலிப்பதாகவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தகவல்.
மாற்றுத்திறனாளிகள் வண்டி வேண்டும் என கோரிக்கை விடுக்கும் போதெல்லாம் மனசு வலிப்பதாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்;
அரியலூர், மே.15- அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமின் இரண்டாம் நாளான இன்று தெம்மனம், ஓட்ட கோவில், பொய்யாதநல்லூர், வெள்ளூர் மற்றும் ராயயபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வருகிறது இதில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் தெம்மனத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் கணேசன் ஆகியோர் அனைத்து துறைகளிலும் தரப்படும் மனுக்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர் அப்போது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் இருக்கின்ற துறைகளிலேயே அதிக அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் துறையாக தொழிலாளர் நலத்துறை உள்ளது எனவே இதற்கு முன்னுரிமை கொடுத்து மணுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கூறினார் மேலும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கினை பார்வையிட்ட அமைச்சர் கணேசன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தரப்பட்ட மனுக்கள் குறித்தும் தீர்வு காணப்பட்ட மனுக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரம் குறித்து கேட்டிருந்தார் அப்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் கேட்டு மனு அளிக்கும் தகுதி உள்ள அனைவருக்கும் உடனடியாக உதவி உபகரணங்கள் வழங்க வேண்டும் நாங்கள் செல்லும் இடங்களில் வண்டி வேணும் என மாற்றுத்திறனாளிகள் கேட்கும்போது மனசு வலிக்கிறது எனவே அதிகாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என கூறினார் இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 400 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சிவசங்கர் கணேசன் ஆகியோர் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்