பர்கூர் அருகே லாரியில்கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்.
பர்கூர் அருகே லாரியில்கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீசார் காரக்குப்பம் கனரா வங்கி முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்திய போது போலீசாரை பார்த்தும் லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனை செயிட்ட போது பாக்கு மட்டைக்குள் மறைத்து வைத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் செய்ததில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான 2.5 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பிஓடிய லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.