ஓசூர்: ஒற்றைச்சாளர இணைய தளம் குறித்த விழிப்புணர்வு.
ஓசூர்: ஒற்றைச்சாளர இணைய தளம் குறித்த விழிப்புணர்வு.;
கிருஷ்ணகிரி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் தொழில் அனுமதிகளை ஒற்றைச்சாளர முறை இணையதள வசதி குறித்த விழிப்புணர்வு முகாம் ஒசூர் ஃபார்ச்சூன் ஐடிசி உணவகத்தில் நேற்று விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தொடங்கி வைத்து பேசினார். அப்போது ஓசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்க மாநில அரசு திட்டங்களை வகுத்துள்ளது பல ஐடி நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனங்களை ஓசூரில் தொடங்க விரும்புகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட தொழில்மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன் வட்டாட்சியர் குணசிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.