இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. ஹெல்மெட் அணிந்திருந்தும் தலை சிதறி பலியான இளைஞர்
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. ஹெல்மெட் அணிந்திருந்தும் தலை சிதறி பலியான இளைஞர்;
அருப்புக்கோட்டை புறவழிச்சாலை சர்வீஸ் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. ஹெல்மெட் அணிந்திருந்தும் தலை சிதறி பலியான இளைஞர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராகுல்(23). இவர் காரியாபட்டியில் உள்ள தனியார் இரு சக்கர வாகன விற்பனையகத்தில்(BAJAJ SHOW ROOM) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று ராகுல் காரியாபட்டி வாகன விற்பனையகத்தில் புதிதாக இருசக்கர வாகனம் டெலிவரி செய்ய வேண்டி இருப்பதால் அதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள பஜாஜ் ஷோரூமில் இருந்து புதிய பஜாஜ் இருசக்க வாகனத்தை எடுத்துக் கொண்டு அருப்புக்கோட்டை புறவழிச்சாலை சர்வீஸ் சாலை வழியாக காரியாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாய்பாபா கோவில் அருகே அவ்வழியாக எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது ராகுல் ஒட்டி சென்ற இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராகுல் மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பாளையம்பட்டியைச் சேர்ந்த நாகபாண்டி(45) இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் நாகபாண்டி என்பவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்த விபத்தில் பஜாஜ் ஷோரூமில் இருந்து புதிய இருசக்கர வாகனத்தை ஒட்டி சென்ற ராகுல் ஹெல்மெட் அணிந்திருந்தும் தலை சிதறி உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் நகர் காவல் நிலைய போலீசார் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.