திருச்சுழி அரசு கலைக் கல்லூரியில் தனியார் பங்களிப்பில் ஐந்து கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர் அனுமதி - தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
திருச்சுழி அரசு கலைக் கல்லூரியில் தனியார் பங்களிப்பில் ஐந்து கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர் அனுமதி - தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்*;
திருச்சுழி அரசு கலைக் கல்லூரியில் தனியார் பங்களிப்பில் ஐந்து கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர் அனுமதி - தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.1கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாணவிகளை வைத்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே விடத்தகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.1 கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மாணவிகளை வைத்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர். பின்னர் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரச பேசியதாவது: நான் அண்மையில் டெல்லிக்கு சென்று இருந்த போது ஒன்றிய நிதி அமைச்சரிடம் சந்தித்து உரையாடும்போது விருதுநகர் மாவட்டம் குறிப்பாக இந்த திருச்சுழி சட்டமன்ற தொகுதி முன்னேற விளையக்கூடிய தொகுதியாக இருக்கிறது. இங்கு உள்ள அரசு கல்லூரியில் விளையாட்டு அரங்கம் அமைத்தால் நன்றாக இருக்கும் என அம்மையாரிடம் கோரிக்கை வைத்தேன். இந்த வேண்டுகோளை கணவுடன் ஏற்றுக்கொண்டு அதற்கான உரிய பரிந்துரைகளை ஒன்றிய நிதி அமைச்சர் செய்து தற்போது தனியார் பங்களிப்போடு 5 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி வழங்கி உள்ளனர். விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி வழங்கிய ஒன்றிய நிதி அமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். நமது பகுதி ஒரு கிராமப்புற பகுதியாக இருந்தது. 2011-ஆம் ஆண்டுகளில் நான் கல்வித்துறை அமைச்சராக இருக்கின்ற பொழுது நம்முடைய தொகுதியில் அதிகமான பள்ளிக்கூடங்களை உருவாக்கினோம். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் பெண் குழந்தைகளுக்காக தான் இங்கே ஒரு கல்லூரி அமைய வேண்டும் என்பதற்காக நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 2021 - ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட முதல் கல்லூரி நமது திருச்சுழி கல்லூரி தான். நீங்கள் எல்லோரும் இந்த கல்லூரியில் படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். நீங்கள் அனைவரும் மேன்மேலும் உயர்ந்து சிறக்க வேண்டும் என்பதற்காக தான் முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் மூலம் உங்களுக்கு மாதம் ரூ.1000-/- வழங்கப்பட்டு அனைவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக தான். கல்லூரி படிப்பு என்பது இந்த கல்லூரியோடு நின்று விடாமல் மேன்மேலும் படித்து ஆராய்ச்சி மாணவர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரியாக நீங்கள் அனைவரும் உருவாக வேண்டும். இந்த முறை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நமது மாநிலத்தில் படித்த 47 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வாகியுள்ளனர். என மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.