மிதலைக்குளம் புளியங்குளம் பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரயில்வே சுரங்க பாலம் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில் - தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட
மிதலைக்குளம் புளியங்குளம் பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரயில்வே சுரங்க பாலம் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில் - தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.*;
திருச்சுழி அருகே மிதலைக்குளம் புளியங்குளம் பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரயில்வே சுரங்க பாலம் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில் - தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நீர் வழித்தடத்திற்கு இடையூறு இல்லாமலும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மீண்டும் ரயில்வே பாலம் சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என உறுதியளித்த நிதியமைச்சர் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மிதலைக்குளம் புளியங்குளம் கிராமத்தின் வழியாக மானாமதுரை - அருப்புக்கோட்டை செல்லக்கூடிய ரயில்வே வழித்தடம் இருந்து வருகிறது. இந்த ரயில்வே வழித்தடம் பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே சுரங்க பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று சரியான திட்டமிடுதல் இன்றி பாலத்திற்குள் சென்றால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்தில் சிக்கும் வகையில் குறுகலாகவும், மேலும் நீர் வழி தடத்தில் இருப்பதால் பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் ரயில்வே சுரங்க பாலம் அமைக்கும் பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தற்காலிகமாக ரயில்வே கிராசிங் பாதையை பொதுமக்கள் கடந்து செல்லும் பகுதிகள் முக்கோண வடிவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாலும், அப்பகுதியில் அதிகமான மேடு பள்ளங்கள் இருப்பதாலும் ஆளில்லா ரயில்வே கிராசிங் அவ்வப்போது கடந்த செல்லும் ரயில்களின் நேரத்தை சரிவர அறியாத பொதுமக்கள் தற்போது வரை மிகுந்த அச்சத்துடனே ரயில்வே கிராசிங் பாதையை கடந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ரயில் விபத்துகளில் சிக்கும் அபாயகரமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் மிதலைக்குளம் புளியங்குளம் ரயில்வே சுரங்கப்பாதையை சரி செய்து விபத்துகளை தடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் ஆகியோர் ரயில்வே சுரங்க பாலம், தற்காலிக பாதை மற்றும் ரயில்வே தண்டவாளத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களிடம் நீர்வழிப் பாதைகளுக்கு இடையூறு இல்லாமலும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் மீண்டும் இந்த ரயில்வே சுரங்க பாலத்தை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.