அருந்ததியர் குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுமிக்கு படுகாயம் - தகவல் அறிந்து உடனே அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தமிழ்நாடு நிதி

அருந்ததியர் குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுமிக்கு படுகாயம் - தகவல் அறிந்து உடனே அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு*;

Update: 2025-05-15 15:01 GMT
திருச்சுழி அருகே அருந்ததியர் குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுமிக்கு படுகாயம் - தகவல் அறிந்து உடனே அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாசுபுரம் கிராமத்தில் உள்ள அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் சுமார் 40 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார்150 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் வீடுகள் சுமார் 24 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வீடுகளின் மேற்கூரைகள் உள்பட பல்வேறு இடங்கள் சேதமடைந்த நிலையில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சுழி பகுதியில் கடந்த சில தினங்ளாக கோடை மழை பெய்து வரும் நிலையில் ஏற்கனவே வீடுகள் அனைத்தும் சேதமடைந்து இடியும் நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் சவ்வாசுபுரம் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் வீராச்சாமி (34). அருப்புக்கோட்டை தனியார் சிலிண்டர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (31).இவர்களுக்கு திருமணமாகி கிருத்திகாதேவி(7) உள்பட இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் கிருத்திகாதேவி அருப்புக்கோட்டையிலுள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து முடித்த நிலையில் மூன்றாம் வகுப்பு செல்கிறார். இந்நிலையில் தந்தை வீராச்சாமி மற்றும் மனைவி குழந்தைகள் உள்பட 4 பேரும் குடும்பத்துடன் வீட்டிற்குள் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் வீராச்சாமி குடியிருந்து வரும் ஏற்கனவே சேதமடைந்த அருந்ததியர் குடியிருப்பின் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது இடிந்து விழுந்தது. இதில் 7 வயது குழந்தையான வீராச்சாமியின் மகள் கிருத்திகாதேவியின் மீது வீட்டின் சிமெண்ட் பூச்சு மற்றும் நீட்டி கொண்டிருந்த கம்பியுடன் கூடிய மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில் கம்பி குத்தியதில் கிருத்திகாதேவி படுகாயம் அடைந்தார். மேலும் அதிகாலை என்பதால் வீராச்சாமியின் வீட்டில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வீடு இடிந்து படுகாயமடைந்த கிருத்திகாதேவி மற்றும் அவரது தந்தையான வீராச்சாமி ஆகிய இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தகவல் அறிந்த தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு உடனே அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கினார். மேலும் சிறுமிக்கு தேவையான சிகிச்சைகளை செய்ய மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர்.

Similar News