திமுக ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டதாக ராஜபாளையத்தில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டதாக ராஜபாளையத்தில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.;

Update: 2025-05-15 15:05 GMT
திமுக ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டதாக ராஜபாளையத்தில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதிகளில் அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பூபால்பட்டி தெரு, பெரிய சுரைக்காய் பட்டி தெரு மற்றும் சம்பந்த புரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக முன்னால் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசும் போது, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அதிமுக வெற்றி பெறும். மத்திய அரசுக்கு யோசனை கூறி, நிதிகளை பெறும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி நல்ல பொறுப்புக்கு வரும் காலம் நெருங்கி வருகிறது. அதிமுக மேல் நம்பிக்கை இருப்பதால்தான் பெண்கள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை வழங்குகின்றனர். அதிமுகவில்தான் பெண்களை தாயாக நேசிக்கக் கூடியவர்கள்.‌ திமுகவினரிடம் பெண்கள் செல் நம்பர் வழங்க மாட்டார்கள். ஏனென்றால் களவாணித்தனம் செய்வார்கள் என்பது பெண்களுக்கு தெரியும். ஏமாற்றி தான் திமுக ஓட்டு வாங்கியது என்பது அவர்களுக்கு தெரியும். சொத்து வரி உயர்வு காரணமாக வரி கட்டாதவர்கள் வீடுகளுக்கு முன் குப்பையை கொட்டுவது, கதவை பூட்டுவது போன்ற அகராதித்தனம் அடாவடிதனம் அதிமுக ஆட்சியில் நடக்கவில்லை. உழைப்பவர்களை சுரண்டி பிழைக்கும் இயக்கமாக திமுக மாறிவிட்டது. திமுகவின் அதிகார வர்க்கம் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாலை வியாபாரிகளிடம் கமிஷன் வாங்கும் இழிநிலை மாற வேண்டும் என்றால் திமுக ஆட்சி ஒழிய வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தான் திமுக ஆட்சியில் வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். வேஷம் போடும் திமுகவினரின் நாடக வேஷத்தை கலைத்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அனைத்து இடங்களிலும் லஞ்சம். கரப்ஷன் கலெக்சன் இதுதான் திமுகவின் குறிக்கோள். திமுக ஆட்சி வெற்று பகட்டுக்காக நடைபெறுகிறது. ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டனர். ஆனால் தெருக்கோடிக்கு வந்து மக்களை சந்திப்பது கிடையாது. வரியை போட்டு வசூல் செய்து சாப்பிடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். திமுகவினரின் ஆட்டம் ஓட்டம் முடிவுக்கு வரப்போகிறது. பழைய பேருந்து நிலையத்தை புதுப்பிப்பது என்ற பெயரில் அனைத்து இடங்களிலும் கடைகளை கட்டி உள்ளனர். மக்கள் காத்திருப்பதற்கும் பேருந்து வருவதற்கும் இடம் குறைந்துவிட்டது. ஜன நெருக்கடியை அதிகரித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் அரசுதான் திமுக. ஏலம் விட்டு பணம் பார்ப்பதற்காகவும், திமுகவினர் ஆளுக்கொரு கடை நடத்துவதற்காகவும் பேருந்து நிலையத்தை பாழாக்கி விட்டனர். ஏழை மக்கள் 25000 வாடகை கொடுத்து கடை நடத்த முடியுமா. அதுபோக இரண்டு லட்சம் ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும். மேலும் கட்சியினருக்கு தனியாக பணம் வழங்க வேண்டும். ஊழல் செய்து சேர்த்த பணம் நிற்காது. ஏழையின் வயிற்றில் அடித்து சேர்த்த பணம் கண்டிப்பாக நிலைக்காது கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். வியாபாரம் பார்த்து வரும் லாபத்தில் வீடு கட்டலாம். ஆனால் கொள்ளையடித்த பணத்தில் சுரங்கம் தோண்டி வீடு கட்டுகிறார் ஒருவர். வாக்களித்த மக்களுக்கு நியாயமாக நம்பிக்கையாக அவர் நடக்கவில்லை.

Similar News