கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த வாலிபர் கைது

திண்டுக்கல் வக்கம்பட்டி பிரிவு அருகே உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த வாலிபர் கைது;

Update: 2025-05-16 03:28 GMT
திண்டுக்கல்லை சேர்ந்த கருப்பையா என்பவர் தனது மனைவியுடன் பழைய வக்கம்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செம்பட்டி, மேட்டுப்பட்டியை சேர்ந்த பகவதி மகன் பரத்குமார்(24) என்பவர் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி நான் இந்த ஏரியா ரவுடி என்று கூறி சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்ததாக கருப்பையா அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பரத்குமாரை கைது செய்து சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News