கோவை: யானைகள் அடையாளப்படுத்துதல் பயிற்சி !
கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர்பயிற்சியகத்தில் வன சரகர்கள், வனப்பாப்பாளர்கள் மற்றும் வனபணியாளர்களுக்கு யானைகளை அடையாளம் காண்பது குறித்த பயிற்சி நடைபெற்றது.;
கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர்பயிற்சியகத்தில் வன சரகர்கள், வனப்பாப்பாளர்கள் மற்றும் வனபணியாளர்களுக்கு யானைகளை அடையாளம் காண்பது குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வனத்துறை கோவை கோட்டம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் யானைகளின் உடல் அமைப்பை வைத்து அடையாளப்படுத்துவது குறித்து விளக்கமளித்தனர். மேலும், யானை-மனித மோதல் தடுப்பு, யானைகளின் நடத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் யானைகளை பிடிக்க பொதுமக்கள் போராடும்போது நிலைமையை கையாளுதல் போன்ற விஷயங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக, யானைகளுக்கு பெயரிடுவதை விட அடையாள எண்கள் (ID) வழங்குவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட இயக்குநர் அன்சர்தீன் இந்த பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.