கிருஷ்ணகிரி: காதலியுடன் உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றியவர் கைது.
கிருஷ்ணகிரி: காதலியுடன் உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றியவர் கைது.;
காதலியுடன் உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றியவர் கைது கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ஆகாஷ் (27) என்பவரும் 22 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த ஆண்டு 2024 மார்ச் 31-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பிறகு ஆகாஷ் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த பெண் திருமணத்தை விரைந்து முடிக்குமாறு வற்புறுத்தினார். அதற்கு ஆகாஷ் மறத்தும் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்த னர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.