அமைச்சர் தலைமையில் திமுகவினர் ஆலோசனை கூட்டம்
மதுரை ஜீவா நகரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.;
மதுரை வடக்கு மாவட்டம் ,மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜீவா நகர் பகுதி கழகம் சார்பாக தனியார் மண்டபத்தில் இன்று (மே.6) நடைபெற்ற பொது உறுப்பினர் கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். அதனை தொடர்ந்து தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் பேசினார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.