மதுரை நகரில் மிதமான மழை.

மதுரை நகரில் இன்று மாலை மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.;

Update: 2025-05-16 11:21 GMT
மதுரையில் இன்று (மே.16) இரண்டாவது நாளாக மாலையில் மழை பெய்ய தொடங்கிவிட்டது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழை 4:30 மணி அளவில் தொடங்கியது. காற்றுடன் கூடிய மழையானது கால் மணி நேரத்திற்கு மேலாக பெய்து வருகிறது. பகலில் வெயில் அதிகமாக காணப்பட்ட நிலையில் இன்று மாலை மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே மழையும் வந்தது . இதனால் ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு வருகிறது.

Similar News