தாராபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம்
தாராபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம். அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது;
தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நலச்சங்கத்தின் ஆட்சிமன்ற குழுக் கூட்டம் நடந்தது. இதில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டார். மேலும் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனைகட்டிடப்பணிகளை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இதில் தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா, முதன்மை குடிமை மருத்துவர் பெரியசாமி, முதன்மை குடிமை மருத்துவர் (குருதி வங்கி) சக்தி ராஜ், உதவிப் பொறியாளர் (பொதுப்பணித்துறை) ரம்யா, நோயாளிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.