கரூர்-சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சாதனை.

கரூர்-சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சாதனை.;

Update: 2025-05-16 13:25 GMT
கரூர்-சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சாதனை. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதுவே கரூரை அடுத்த வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். மாணவி பி.எஸ். தர்ஷனா 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடமும், பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார் . எ.ரிதன்யா ஸ்ரீ & ஆர். சங்கமித்ரா ஆகிய மாணவிகள் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளனர். கே.தன்யா என்ற மாணவி 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடம் பிடித்துள்ளார். எம்.எஸ்.நேத்ரா & எஸ் .தனுஸ்ரீ ஆகிய மாணவிகள் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று 4-ம் இடம் பிடித்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 6 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 4 மாணவர்களும், கணிதத்தில் ஒரு மாணவியும் 100/100மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் 7 மாணவர்கள், ஆங்கிலத்தில் 15 மாணவர்கள், கணிதத்தில் 3 மாணவர்கள், அறிவியலில் 6 மாணவர்கள், சமூக அறிவியலில் 12 மாணவர்கள் 99/100மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். சாதனை புரிந்த மாணவிகளுக்கு பள்ளியின் செயலாளர் பி.எம்.கே. பெரியசாமி, தாளாளர் பி.எம்.கே.பாண்டியன், முதல்வர் வி.பழனியப்பன், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவச் செல்வங்கள் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Similar News