டிராக்டர் கவிழ்ந்து விபத்து - சிறுவன் பலி
குஜிலியம்பாறை அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து, சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் தமிழரசன்(15) இவர் பள்ளி விடுமுறையை தொடர்ந்து குஜிலியம்பாறையில் உள்ள தனது மாமா மாசி என்பவர் வீட்டிற்கு வந்து இருந்தார். இந்நிலையில் இன்று பசுபதி என்பவர் உடன் தமிழரசன் டிராக்டரில் காச்சக்காரன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த முகத்தில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்