அனுமதியின்றி வைத்த பேனர்கள் அகற்றம்

மதுரை உசிலம்பட்டியில் அனுமதியின்றி வைத்த பேனர்களை நகராட்சி நிர்வாகம் அகற்றியது.;

Update: 2025-05-17 01:43 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகளில் தேனி சாலை, மதுரை சாலை, பேரையூர் சாலை, வத்தலக்குண்டு சாலை பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்ற சூழலில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், நகராட்சியில் அனுமதியின்றியும் திருமணம், இல்ல விழா, பள்ளி கல்லூரி விளம்பரங்களாக ஏராளமான ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை நேற்று (மே.16) உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் சக்திவேல் உத்தரவின் பேரில் நகராட்சி அலுவலர்கள் அனுதியின்றி வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்களை அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News