வாகன விபத்தில் கட்டிட தொழிலாளி பலி.

மதுரை பாலமேடு அருகே வாகன விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.;

Update: 2025-05-17 01:47 GMT
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த கணேசன் (30 என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று (மே.16)காலை இருசக்கர வாகனத்தில் முடுவார்பட்டி சாலை வழியாக மதுரைக்கு தனது நண்பருடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளையம்பட்டி – முடுவார்பட்டிபிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சுமோ கார் ஒன்று கணேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியதில் பலத்த அடிபட்டு கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து பாலமேடு போலீசார் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருசக்கர வாகனம் மீது சுமோ கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Similar News