சாலை விபத்தில் ஒருவர் பலி

மதுரை மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார்.;

Update: 2025-05-17 02:59 GMT
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சீயந்தான்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவர் அய்யாபட்டி விலக்கில் பெட்டி கடை நடத்தி வந்தார். இவர் நேற்று (மே.16)காலை கடைக்கு பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் கருங்காலக்குடிக்கு சென்றுள்ளார் . இவர் பட்டமங்கலப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் இவரது இருசக்கர வாகனத்தில் மீது மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News