ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்.

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.;

Update: 2025-05-17 03:09 GMT
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதல் அரங்கத்தில் இன்று (மே.17) ஜல்லிக்கட்டு பேரவை தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தார்கள். இதில் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமான ஜல்லிக்கட்டு ரசிகர்கள் கூடியிருந்தனர்.போட்டி துவங்குவதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாடுபிடி வீரர் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் பல வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் கூடுதலான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Similar News