ஓசூர் அருகே மதுபான பாக்கெட்டுகள் கடத்தி வந்தவர் கைது

ஓசூர் அருகே மதுபான பாக்கெட்டுகள் கடத்தி வந்தவர் கைது;

Update: 2025-05-17 03:35 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் மத்திகிரி போலீசார் கர்நாடக எல்லையில் உள்ள சோதனை சாவடி அருகில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்ட போது வேனில் 376 கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்ததும், அதில் 24 ஆயிரத்து 440 ரூபாய் மதிப்பிலான 67 லிட்டர் மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து விசாரைணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மதகொண்டப்பள்ளி அடுத்த உப்பாரப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் (31) என் பவரை போலீசார் கைது செய்து மதுபானங்கள் மற்றும் வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News