கரூர் அருகே சாலை விபத்து. ஒரு குழந்தை உட்பட நான்கு பேர்கள் பலியான சோகம்.

கரூர் அருகே சாலை விபத்து. ஒரு குழந்தை உட்பட நான்கு பேர்கள் பலியான சோகம்.;

Update: 2025-05-17 10:13 GMT
கரூர் அருகே சாலை விபத்து. ஒரு குழந்தை உட்பட நான்கு பேர்கள் பலியான சோகம். கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை, நாவல் நகர் அருகே ஆம்னி பேருந்து, டிராக்டர் மற்றும் டூரிஸ்ட் வேன் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். சேலத்திலிருந்து கரூர் நோக்கி சென்ற சொகுசு பேருந்து, கரூர் மாவட்டம் செம்மடை,நாவல் நகர் அருகே முன்னே சென்ற டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனை தாண்டி எதிர்ப்புறம் சென்று சுற்றுலா வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் - நான்கு பேர் பலி என தகவல். தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட போலீசார், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலியான சம்பவம் கரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News