சூளகிரி: விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி.
சூளகிரி: விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி.;
கிருஷ்ணகிரி மாவட்டம்சூளகிரி வட்டார வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா) பண்ணப்பள்ளி பகுதியில் பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், வேளாண்மை அலுவலர் பவித்ரா, துணை வேளாண்மை அலுவலர் பழனி உள்ளிட்டோர் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.