ஓசூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.
ஓசூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொரப்பள்ளி ராஜாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரப்பா (73) விவசாயி. இவருக்கு உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக இவர் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார் ஆனால் குணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த ராமச்சந்திரப்பா கடந்த 16-ஆம் தேதி அன்று விஷம் குடித்து மயங்யி நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.