ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்த பக்தர்கள்
மதுரை உசிலம்பட்டி அருகே பத்ரகாளி அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.;
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின் முறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இத்திருவிழாவில் நேற்று (மே.17) சக்தி கரகம் எடுத்து பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தவனத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.அதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாடார் மகாஜன மாநில தலைவர் கரிக்கோல்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.