கே.ஆர்.பி அணையிலிருந்து ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீா்.
கே.ஆர்.பி அணையிலிருந்து ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீா்.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1152 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.25 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து பாசனக் கால்வாய்கள் மற்றும் ஆற்றிலும் விநாடிக்கு 664 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.