திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்ரீ விசாலாக்ஷி சமேத ஸ்ரீ மஹாதேவ ஸ்வாமி அறக்கட்டளை நடத்தும் 20வது ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் நிகழ்ச்சி இன்று (மே 18) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கல்யாண மஹோத்ஸவம் நிகழ்ச்சியை கண்டு தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.