புதிய சமுதாயக் கூடத்தினை ஆய்வு செய்த அமைச்சர்
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தினை அமைச்சர் ஆய்வு செய்தார்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் கோவில்பட்டியில் தாட்கோ மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூட்டத்தினை நேற்று (மே.17) ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார் . விரைவாக பணிகளை முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.அவருடன் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.