சுவராசியத்தை கொடுத்த விஜய் கட்சி போஸ்டர்கள்

மதுரை நகரில் விஜய் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் சுவராசியமாக பேசப்பட்டு வருகிறது.;

Update: 2025-05-18 07:26 GMT
மதுரையில் போஸ்டர்கள் கலாசாரம் பிரபலமானது.தற்போது விஜய் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் சுவாரசியமாக பேசப்படுகிறது. அவ்வப்போது விஜயை குறித்து விதவிதமான கருத்துக்களை கூறிவரும் செல்லூர் ராஜு செக் வைக்கும் வகையில் அவரது மேற்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவார் எனவும், சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என மக்கள் முதல்வர் எனவும் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி உள்ளார்கள். தமிழக வெற்றி கழகத்தின் கட்சியினர் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அதிமுகவின் கோட்டை என கருதப்படும் மதுரை மேற்கு தொகுதி கடந்த மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக செல்லூர் ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் திமுகவில் மேற்கு தொகுதி அமைச்சர் மூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் செல்லூர் ராஜூ பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து வருகிறது. தற்போது இந்த போஸ்டர்கள் மூலம் தவெக கட்சியினர் செல்லூர் ராஜூவை வம்புக்கு இழுப்பது போல தோன்றுவதாக போஸ்டர்களை பார்த்தவர்கள் பேசிக் கொண்டனர்.

Similar News