பாகலூர்:கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
பாகலூர்:கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது;
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசார் காஜல்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம் அளிக்கும்படி ஒரு வாலிபர் நின்றிருந்தார். அவரிடம் சோதனை செய்ததில், அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில் அவர் உதயநாராயணன் (22) என்பதும் பாகலூர் பெலத்தூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.