நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள ஏழை நரிக்குறவர் குடும்பத்திற்கு ரோட்டரி சங்கம் சார்பில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டது. இதனை இன்று (மே 18) பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.