மேம்பாலத்தில் கார் தீ பிடித்து எரிந்தது.
மதுரையில் நேற்றிரவு கார் தீ பிடித்து எரிந்து முற்றிலும் சேதமானது.;
மதுரை நகர் கோரிப்பாளையம் பாலம் அருகே நேற்று (மே.18) இரவு 11 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணம் செய்தனர். அப்போது கார் ஏவி பாலத்தின் மீது சென்றபோது திடீரென காரில் தீ பிடித்தது.இதனைக் கண்ட 4 பேரும் அதிர்ச்சியில் காரை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். இதனையடுத்து கார் பற்றி எரியத்தொடங்கியது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும் கார் தீயில் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.