விழுப்புரம் மாவட்டம்,வளவனுார் அடுத்த எல்.ஆர்.பாளையம் ரகு மகன் சுகன், 24; இவர், கடந்த 15ம் தேதி, கெங்கராம்பாளையம் சென்று வீடு திரும்பினார். வழியில் நின்றிருந்த தனது தோழி கெங்கராம்பாளையம் சிரஞ்சீவி மனைவி பிரபாவதி, 19; என்பவரிடம் பேசினார். இதனை பார்த்து கோபமடை ந்த சிரஞ்சீவி, எனது மனைவியிடம் ஏன் பேசுகிறாய் என கேட்டு, சுகனிடம் தகராறு செய்தார். இதில் இருவரும் தாக்கிக் கொண்டனர். வளவனுார் போலீசார், சிரஞ்சீவி, சுகன் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.