தளி அருகே மரம் முறிந்து விழுந்ததில் வீடுகள் சேதம்.
தளி அருகே மரம் முறிந்து விழுந்ததில் வீடுகள் சேதம்.;
கிருஷ்ணகிரி மவட்டம் தளி அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் இருந்த பழமை வாய்ந்த அரசமரம் நேற்று முன்தினம் ரமேஷ் என்பவர் வீட்டின் மேற் கூரை து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ரமேஷ் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அருகில் உள்ள வீடுகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. தகவல் அறிந்து வந்த தளி வருவாய்துறையினர் மற்றும் போலீசார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.