சூளகிரி அருகே சிறுமியை திருமணம் செய்தவருக்கு காப்பு.

சூளகிரி அருகே சிறுமியை திருமணம் செய்தவருக்கு காப்பு.;

Update: 2025-05-20 00:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள உஸ்தலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமன் (28)விவசாயியான இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராமன் அந்த சிறுமியை கடந்த 17-ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் தந்தை ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இளம்வயது திருமண தடை சட்டம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமனை கைது செய்தனர்.

Similar News