சுருளகோடு ஊராட்சியில் அனந்தனார் கால்வாய் செல்கிறது. இதிலிருந்து உல்லிமலை மறுகால் ஓடை செல்கிறது. புத்தனார் அணையிலிருந்து 2 கி.மீட்டர் தொலைவிலும் குறிப்பாக பாண்டியன் கால்வாயிலிருந்து அனந்தனார் கால்வாய் வருகின்ற பகுதியிலிருந்து 600 மீட்டர் தொலைவில் உள்ள பகுதயில் இவ்உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் இதனை சரி செய்யும் பொருட்டு அனந்தனார் கால்வாயிலிருந்து உல்லிமலை ஓடைக்கு அடிமடை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்ட தளவாய் சுந்தரம் பின்னர் தெரிவிக்கையில், தற்போது கால்வாய் உடைப்பை சரி செய்யும் பணிகள் ரூ. 1 கோடியே 10 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் அனந்தனார் கால்வாய் மூலம் பயன் பெறும் சாகுபடிக்கு தற்போது தண்ணீர் விட முடியாத சூழ்நிலை இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை அலுவலர்கள் பேச்சிப்பாறை அணை திறப்பதற்கு முன்பாக இப்பணிகளை விரைவில் முடிப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். என அவர் தெரிவித்தார். உடன் தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சாந்தினிபகவதியப்பன், முன்னாள் அருமநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வெங்கடேஷ் (எ) வேலாயுதம்பிள்ளை, ஆகியோர் இருந்தனர்.