திருவெண்ணைநல்லூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு ஏழு பேர் கைது

80 கிலோ கஞ்சா பறிமுதல்;

Update: 2025-05-20 03:10 GMT
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டவர்களை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர், இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்த தமிழ் (21) , அனந்தபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (21) ,ஒட்டம்பட்டு பகுதியை சேர்ந்த தினேஷ் (19) சென்னையை சேர்ந்த கணேசன் (40), தனம் (60) கார்த்திக் (32) , சீனுவாசன் (30) ஆகிய பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து விழுப்புரம் தனிப்படை காவல்துறை கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News