ராமன்துறையில் விஜய்வசந்த் எம்பி பிறந்த தினம்

கன்னியாகுமரி;

Update: 2025-05-20 11:20 GMT
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி பொருளாளருமான விஜய் வசந்த் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் மீனவர் காங்கிரஸ் சார்பில் ராமன்துறை மீனவ கிராமத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது. தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் தலைமையில் குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் அந்தோனிபிச்சை, இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின், ராமன்துறை கிராம காங்கிரஸ் தலைவர் ரீத்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ , குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Dr. பினுலால் சிங் ஆகியோர் 42-மீனவ பெண்களுக்கு வசந்த் & கோ ராட்சச குடை, மீன் விற்பனை செய்வதற்கான மீன் சருவம், ஏழை மீனவ பெண்களுக்கு 5-கிலோ பாக்கெட் இலவச அரிசி ஆகியவைகளை இலவசமாக வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Similar News