பொதுமக்கள் திமுக அரசின் மீது பெரும் கோபத்தில் உள்ளனர் !!!விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஆவேசம்...
பொதுமக்கள் திமுக அரசின் மீது பெரும் கோபத்தில் உள்ளனர் !!!விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஆவேசம்...;
பொதுமக்கள் திமுக அரசின் மீது பெரும் கோபத்தில் உள்ளனர் !!!விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஆவேசம்... விருதுநகரில் நகர கழகம் சார்பில் நகர கழக செயலாளர் வெங்கடேஷ் ஏற்பாட்டில் பாகப் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட பூச்சம்பட்டி பொறுப்பாளர் தான் மகேந்திரன் கலந்து கொண்டு பாக பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி நடக்கின்ற திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு பொய்யான வாக்குறுதிகளையும் நம்ப முடியாத வாக்குறுதிகளையும் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக மக்களைப் பற்றி கவலைப்படாமல் தன் குடும்பத்தை பற்றிய கவலையில் உள்ள காரணத்தினால் பொது மக்கள் திமுக மீது பெரும் கோபத்தில் இருக்கின்றார்கள் இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் திமுக இல்லாத நிலைநீடிக்கின்ற நிலைமை வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்றும் தெரிவித்தார் நான்காண்டு சாதனை சொல்லி திமுகவினர் விளம்பரம் செய்கிறார்கள் ஆனால் திமுக செய்த நான்காண்டு சாதனை என்பது பெண்களுக்கு இலவச பஸ் என்று சொல்லியது திமுக அரசு ஆனால் திமுக வில் உள்ள பொன்முடி போன்ற மூத்த அமைச்சர்கள் அவர்களை ஒசி பஸ்ஸில் செல்பவர்கள் என்று சொல்லி நக்கல் செய்கின்ற அமைச்சர்கள் தான் திமுகவில் இருக்கின்றார்கள்.இந்த செயல்களால் தான் பொதுமக்கள் பேருந்தில் செல்லக்கூட கூச்சப்படுகிறார்கள் என்றும் மேலும் தமிழக மக்களின் ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் 15000 இருந்த நிலையில் திமுக ஆட்சி வந்த நான்காண்டில் ஒரு குடும்பத்தின் சராசரி வருமானத்தை முப்பதாயிரமாக உயர்த்தி அதற்கு பதிலாக மாதம் ஆயிரம் ரூபாய் தருகின்ற திட்டமும் தோல்வியடைந்துள்ளது மேலும் விளம்பரம் செய்து ஆட்சிக்கு வந்த திமுக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் பொதுமக்கள் முன்பு கண் பிதுங்கி நிற்கிறது என்று திமுகவை கடுமையாக சாடி பேசினார் மேலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் சிறப்பான ஆட்சியை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தான் படித்த பெண்களும், இளைஞர்களும், பொதுமக்களும் எங்கள் பின்னால் வந்து நிற்கிறீர்கள் உங்களுக்கு எப்பொழுதும் அதிமுக தோல் கொடுக்கும் என்றும் பேசினார் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் விஜயகுமாரன், ஒன்றிய செயலாளர் கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.