முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வணிகர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி அதிகார்களுடன் வாக்குவாதம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வணிகர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..*;

Update: 2025-05-20 14:21 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வணிகர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, தெற்கு ரத வீதி பகுதிகளில் வருடா வருடம் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளும் மிகப்பெரிய திருத்தேர் ஆடி மாதம் வலம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபடுவார்கள். இந்நிலையில் நான்கு ரக வீதிகளில் வணிகர்களின் கடை முன்பு போடப்பட்டிருக்கும் தகர செட்டுகள் ஆக்கிரமிப்புகள் அகற்ற முன்னறிவிப்பு நகராட்சி நிர்வாகத்தால் கொடுக்கப்படும் வணிகர்களிடம் கையொப்பம் வாங்கப்படும் தண்டோராக்கள் போடப்படும் உடனடியாக வணிகர்கள் சேதத்தை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை தானாக முன் வந்து அகற்றி விடுவார்கள். இந்நிலையில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் தேரோட்டம் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்கள் இருப்பதற்கு முன்னே வணிகர்களிடமும்,கடை வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நகராட்சி நிர்வாகம் அராஜகப் போக்கில் ஈடுபட்டு ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கடை முன்பு போடப்பட்டிருந்த தகர செட்டுகளை அடித்து நொறுக்கி அகற்றினார் இதனால் வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது இந்நிலையில் ஆத்திரமடைந்த வணிகர்கள் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பெரிதும் கண்டுகொள்ளாத விடியா திமுக அரசின் அதிகாரிகள் அலட்சியமாக கடந்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே முகம் சுழிப்பையும் திமுக ஆட்சியின் அராஜகப் போக்கையும் எடுத்துக்காட்டியது வணிகர்கள் தங்களுக்கு முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Similar News