ஈஷா சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து - உயிர் சேதம் தவிர்ப்பு - பலலட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்*

ஈஷா சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து - உயிர் சேதம் தவிர்ப்பு - பலலட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்*;

Update: 2025-05-20 14:23 GMT
விருதுநகரில் ஈஷா சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து - உயிர் சேதம் தவிர்ப்பு - பலலட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் விருதுநகர் ரயில்வே காலனி கே.ஆர்., கார்டனை சேர்ந்தவர் ராமபிரான். இவருக்கு சொந்தமான ஈஷா சூப்பர் மார்க்கெட் மதுரை ரோட்டில் செயல்படு கிறது. இந்த மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருள்களும் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் சூப்பர் மார்க்கெட்டை இரவு 10:30 மணிக்கு ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்ற நிலையில்இரவு 11:30 மணிக்கு கடை உள்ளே தீ பிடித்து கரும்புகை வெளியே வந்துள்ளது,மேலும் தீ முன்னெச்சரிக்கை அலாரம் சத்தம் வந்ததால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும் , காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு இரு வானங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். மேலும் மின்கசிவால் அருகே இருந்த கட்டடங்களுக்கும் தீ பரவாமல் தடுக்க மின்சாரத்தை தடை செய்தனர். இதன் அருகில் இருந்த தனியார் வங்கியின் அலாரம் அடித்ததால் அங்கேயும் தீயணைப்பு துறையினர் தீ பரவாமல் தடுக்க சோதனை செய்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்து தீயில் எறிந்து பாழாகியது. இந்த தீவபத்து குறித்து மேற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கண்ணன், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சந்திர குமார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

Similar News