மத்தூர் அருகே ஆபரேட்டரை தாக்கியவர் கைது.

மத்தூர் அருகே ஆபரேட்டரை தாக்கியவர் கைது;

Update: 2025-05-20 14:53 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளம்பட்டி அடுத்த கே.புதூரை சேர்ந்தவர் சுந்தரேசன் (25). கனரக வாகன ஆபரேட்டர். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு சுந்தரேசனிடம், சைதாபேட்டை பகுதில் உள்ள மகேஷ்குமார் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி அன்று மாலை மகேஷ்குமாரிடம் சுந்தரேசன் பணத்தை திரும்ப கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் மகேஷ்குமார் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த பாவேந்தன் (26) சக்திவேல் (26), தசரதன் (36) ஆகியோர் சேர்ந்து சுந்தரேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் மத்தூர் போலீசார் விசாரணை செய்து தசரதனை கைது செய்தனர். பாவேந்தன், சக்திவேல், மகேஷ்குமார் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News