தாராபுரம் கார் மோதி பெண் பலி மகன் கண் முன்னே பரிதாபம்
உடுமலை சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் மகன் கண் முன்னே தாய் உயிரிழப்பு. தாய் உயிரிழந்த சோகத்தில் கதறிய மகன்.;
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் இவரது மனைவி கனகமணி வயது 35. இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இதே நாளில் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர்களது மகன் விஷ்ணு வயது 17. அனுஸ்ரீ வயது 15 என்ற மகளும் உள்ளனர். கணவனை இழந்த நிலையில் இந்த பெண் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.இவர் உடுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு முடித்துவிட்டு 12ஆம் வகுப்பு சென்றுள்ளார். இந்நிலையில் உடுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பணம் கட்டுவதற்காக சென்றுவிட்டு மீண்டும் தாராபுரம் பகுதிக்குள் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காரும் இவர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த கனகமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விஷ்ணு கண்முன்னே விபத்து ஏற்பட்டு தாய் பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் உடனடியாக அவரை வீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தனது கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த விஷ்ணு அரசு மருத்துவமனையில் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார் மூலனூர் உதவி கோட்ட பொறியாளர் இளம்பூரணம் என்பவரது காரை ஓட்டி வந்த தேனியை சேர்ந்த ஜெயக்குமார் என்ற ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.