புதிய தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம் நகராட்சி தலைவர் வலியுறுத்தல்
புதிய தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம் தாராபுரம் நகராட்சி தலைவர் வலியுறுத்தல்;
தாராபுரத்தில் நேற்று காலை முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு மனுக்களை வாங்கினார். அப்போது நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தாராபுரத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் (தாலுகா ஆபிஸ்) கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதில் 5- வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சாந்தி இளங்கோ, 6 -வது வார்டு செயலாளர் அக்பர் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.