சக்கரைபாளையம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

ஓசூர் அருகே சக்கரைபாளையம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு;

Update: 2025-05-21 01:34 GMT
முத்தூர் அருகே உள்ள சக்கரைபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தலைமை ஆசிரியை ந.மல்லிகா, பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் சிவா கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் சக்கரைபாளையம், பிள்ளையார் கோவில் தோட்டம், புதுப்பாளையம், வெள்ளியங்காடு, வெங்கமேடு, காமராஜ் நகர், சேரம்பாளையம், காந்திநகர், பாரவலசு உட்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதன் அவசியம், நன்மைகள், பலன்கள், சிறந்த கல்விகற்க அரசு பள்ளியை நாடுவதன் அவசியம், இலவச மாணவர் சேர்க்கை, இலவச பாட புத்தகம், இலவச சீருடை, இலவச மதிய உணவு உட்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினர். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா, ஆசிரியை சங்கீதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மேலாண்மை குழு உறுப் பினர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News