கிருஷ்ணகிரி: அஷ்டமியையொட்டிகாலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை.

கிருஷ்ணகிரி: அஷ்டமியையொட்டிகாலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை.;

Update: 2025-05-21 02:42 GMT
கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறுக்கி காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலபைரவ மகாஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடந்தது. இதை தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் அகல் விளக்கேற்றி வழி பட்டனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News