குமரி மாவட்டம் குளச்சல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர வாகன ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாணியகுடி பகுதியில் வைத்து சாலை ஓரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு இரண்டு வாலிபர்கள் பொட்டலங்கள் கொடுத்ததை கண்டனர். உடனடியாக போலீசார் 2 பேர்களையும் பிடிக்க முயன்றனர். இதை கண்டதும், சுதாரித்துக் கொண்ட ஒருவர் தப்பி ஓடி விட்டார். ஒருவரை மடக்கி படித்தனர். விசாரணையில் அவர் சாஸ்தான்கரை பகுதி சேர்ந்த பிரசாத் (25) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் அவரிடமிருந்து 5 கிராம் எடை கொண்ட நான்கு பொட்டலங்கள் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்து பிரசாந்தை கைது செய்தனர். தப்பி ஓடியது குளச்சல் பகுதியைச் சேர்ந்த சபீர் (23) என்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.