ஸ்ரீபெரும்புதூர் தாபா உணவகத்தில் தீ விபத்து

நாவலுார் பகுதியில் 'பி.பி.ஜி. பேமிலி தாபா' உணவகத்தில் திடீர் தீ விபத்தால் பகுதியில் பரப்பரப்பு;

Update: 2025-05-21 11:05 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, நாவலுார் பகுதியில் 'பி.பி.ஜி. பேமிலி தாபா' என்ற பெயரில் கூரை கொட்டகையில் உணவகம் இயங்கிவந்தது. நேற்று இரவு, உணவகத்தின் கூரையில் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதை கண்ட உணவகத்திற்கு சாப்பிட வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு உணவகத்தில் இருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் தீ, ஓலை கூரை முழுதும் மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்புத் துறை வீரர்கள், உணவகத்தில் இருந்த காஸ் சிலிண்டர்களை வெளியேற்றினர். பின்னர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் உணவகத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமானது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், தீ விபத்து குறித்து, உணவகத்தின் உரிமையாளர் சார்பாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என, ஸ்ரீபெரும்புதுார் போலீசார்தெரிவித்தனர்.

Similar News